×

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

ஈரோடு: தமிழகத்தில் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் திக்கைய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதில் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடகத்தை கண்டு கழித்தார். வேலுநாச்சியார் வரலாற்றை பறைசாற்றும் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் 60 கலைஞர்கள் பங்கேற்று, வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வரலாற்றை 1 1/2 மணி நேரத்தில் தத்ரூபமாக கண்முன் நிறுத்தினர். இது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் புத்தக கண்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.17.50 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இலக்கிய விழாவோடு புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். அவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.         …

The post ஈரோடு புத்தகத் திருவிழாவில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Erode Book Festival ,Erode ,Minister of School Education ,Anbil Mahesh Poiyamozhi ,Tamil Nadu ,Velunachiyar ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால்...