×

கடைசி படத்தில் ஹீரோவாக நடித்த டேனியல் பாலாஜி

சென்னை: வில்லனாக வும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தவர், மறைந்த டேனியல் பாலாஜி. அவர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஆர்பிஎம்’. இந்தப்படத்துக்கான மோஷன் போஸ்டர் ஒன்றை விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘தி சவுண்ட் ஸ்டோரி’ பிரசாத் பிரபாகர் இயக்கி இருக்கிறார்.

முக்கிய வேடங்களில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்ய, ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். தாமரை, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

‘புரோக்கன் ஆரோ’ என்ற ஆங்கிலப் பாடலை கல்பனா ராகவேந்தர் எழுதி இசை அமைத்து பாடினார். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்‌ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர், பிரசாத் பிரபாகர் புரொடக்‌ஷன் சார்பில் பிரசாத் பிரபாகர் தயாரித்துள்ளனர். டேனியல் பாலாஜி நடித்துள்ள கடைசி படம் இது.

Tags : Daniel Balaji ,Chennai ,Vijay Sethupathi ,Prasad Prabhakar ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்