×

பெண் ரசிகைகளுக்கு உதட்டில் முத்தம்: உதித் நாராயணனுக்கு குவியும் கண்டனம்

மும்பை: பெண் ரசிகைகளுக்கு அத்துமீறி உதட்டில் முத்தமிட்டார் பாடகர் உதித் நாராயணன். இதற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ‘ரன்’ படத்தில் ‘காதல் பிசாசே’ பாடலை பாடியவர் உதித் நாராயணன். தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள உதித் நாராயனுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சில வருடங்களாக பின்னணி பாடகர் என்பதை தாண்டி, லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் அவரின் ஹிட் பட பாடல்களை பாடி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த லைவ் ஷோவில், உதித் நாராயணன் பாடி கொண்டிருக்கும்போது அவருடன் செல்ஃபி எடுக்க பல ரசிகர்கள் போட்டி போட்டனர். அப்போது, பெண் ரசிகர்களுக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததோடு மட்டும் இன்றி, முத்த மழையும் பொழிந்தார். ஒரு ரசிகை செல்ஃபி எடுத்த பின்னர், கன்னத்தில் முத்தமிட்ட நிலையில் அவரின் தலையை திருப்பு உதித் நாராயணன் உதட்டில் முத்தமிட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மேலும் சில பெண்களுக்கும் முத்தம் தருகிறார். உத்தி நாராயணனின் இந்த செயலுக்கு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : Udit Narayan ,Mumbai ,Udit Narayanan ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி