×

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்

சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் 25-வது படத்துக்கு ‘சக்தித் திருமகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘அருவி‘, ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன், மாஸ்டர் கேசவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னரான இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

Tags : Vijay Antony ,Chennai ,Arun Prabhu ,Vaaz ,Vaagai Chandrasekhar ,Sunil Kriplani ,Sel Murugan ,Trupti Ravindran ,Master ,
× RELATED ரெட்ட தல விமர்சனம்…