×

சவுடு மணல் கொள்ளைபோவதாக பொதுமக்கள் முற்றுகை

சென்னை: வில்லிவாக்கம் அருகே உள்ள நத்தை குட்டை குளத்தில் சவுடு மணல் கொள்ளைபோவதாக மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சி, கொள்ளுமேடு நத்தை குட்டை என்ற குளத்தை ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் தூர்வார டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு மீட்டர் அளவு தூர்வார வேண்டும் என்ற அரசு விதியை மீறி, ஒப்பந்ததாரர் சுமார் 5 மீட்டர் வரை தூர்வாரியுள்ளார். இதன்மூலம், தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மணல் கொள்ளையடிக்கப்பட்டு தனியாருக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.செந்தில்குமார் தலைமையில கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த மக்கள் பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் தூர்வாரும் குளத்தை நேற்று முற்றுகையிட்டு, சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மோகனசுந்தரிடம் முறையிட்டனர்….

The post சவுடு மணல் கொள்ளைபோவதாக பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Saudu sand looting ,CHENNAI ,Villivakkam ,Williwakkam ,Saudu sand ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...