மும்பை: தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்து முடித்த அவர், அடுத்து விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஷாகித் கபூர் ஜோடியாக ‘தேவா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படம் சென்சார் குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தில் ஷாகித் கபூருடன் பூஜா ஹெக்டே நெருக்கமாக தோன்றும் ஒரு காட்சியைப் பார்த்து எதிர்ப்பு தெரிவித்த குழுவினர், குறிப்பிட்ட அக்காட்சியில் இருந்து 6 விநாடிகளை உடனே குறைக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு உத்தரவிட்டு, பிறகு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கினர். இப்படம் தனக்கு திருப்புமுனை தரும் என்று பூஜா ஹெக்டே நம்புகிறார்.
