×

மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை பாஜ ஆட்சியின் சாதனை என்பதா? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: நாட்டில் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய பாஜ ஆட்சியின் சாதனை என்பதா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானியின் சொத்துகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பாஜவின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளன. இதுதான் 8 ஆண்டு மோடி ஆட்சியின் சாதனை என்பதா, மெகா ஊழல் என்பதா? இத்தகைய அழிவு பாதையிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை பாஜ ஆட்சியின் சாதனை என்பதா? கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,KS Alagiri ,Chennai ,BJP government ,Dinakaran ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்