×
Saravana Stores

கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவன் தற்கொலை முயற்சி

துரைப்பாக்கம்: கோவளம் அருகே முட்டுக்காட்டில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பணியாற்றி வருபவர் பரத்துடு (52). இவர், அங்கு காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா (48). மதுப்பழக்கத்துக்கு அடிமையான பரத்துடு தினமும் குடிபோதையில் வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனிடையே நேற்று முன்தினம் இரவு, தம்பதி இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பரத்துடு அங்கு கிடந்த சேலையை எடுத்து சுஜாதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அருகில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சுஜாதா சடலத்தை மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பரத்துடுவை சேர்த்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Traitakkam ,Dumutkata ,Kowalam ,
× RELATED மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை...