×

காட்டை சீரழிப்பதாக புகார்: காந்தாரா 1 படக்குழுவினருக்கு வனத்துறை அபராதம்

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் ‘காந்தாரா’. இதன் அடுத்த பாகமாக ‘காந்தாரா 1’ படம் தயாராகி வருகிறது. இந்த படத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்குகிறார். கர்நாடக மாநிலம் ஹெரூர் கிராமத்தில் ‘காந்தாரா 1’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்குள்ள காட்டு பகுதிகளில் கடந்த ஓரிரு மாதமாக படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது வனப்பகுதியில் படக்குழுவினர் வெடிகளை வெடிக்க செய்துள்ளனர். மேலும் காட்டிலுள்ள சில மரங்களையும் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக அந்த கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வனங்களை அழிப்பதாக கூறி படக்குழுவினருடன் மோதிய வாலிபர் ஹரீஷ் என்பர் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்த சம்பவங்களால் படக்குழுவினர் மீது கிராம மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் செட் பொருட்கள் உள்பட பலவகை குப்பைகளை வனப்பகுதியில் கொட்டியதாக காந்தாரா படக்குழுவினருக்கு ரூ.50 ஆயிரம் அபாரதத்தை வனத்துறை அதிகாரிகள் விதித்தனர். இந்நிலையில் படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என ஹெரூர் கிராமத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் படத்தை தயாரிக்கும் ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனம், கேரளாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Forest Department ,Bengaluru ,Rishabh Shetty ,Herur village, Karnataka ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு