×

சூர்யா என்னை நம்பவில்லை: கவுதம் மேனன் வருத்தம்

சென்னை: 2 ஹிட் படங்களை சூர்யாவை வைத்து தந்தேன். ஆனால் என் மீது அவர் நம்பிக்கை வைக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார் கவுதம் மேனன். இது குறித்து வீடியோ பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறியது: ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் அப்பா கதாபாத்திரத்துக்கு நானா படேகர் மற்றும் மோகன்லால் ஆகியோரிடம் பேசினேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை. உடனடியாக சூர்யா, நானே அப்பா கதாபாத்திரமும் பண்றேன் என்றார். அதே மாதிரி ‘துருவ நட்சத்திரம்’ படத்தை சூர்யா ஒப்புக்கொள்ளவில்லை. அதன் கதையைக் கேட்டுவிட்டு நிறைய முறை பேச்சுவார்த்தை நடந்தது.

இக்கதைக்கு என்ன குறிப்புகள் இருக்கிறது என்று சூர்யா கேட்டுக் கொண்டே இருந்தார். குறிப்புகள் என்று எதுவும் இல்லை, நீங்கள் வந்தால் நான் இந்த படம் செய்வேன் என சொன்னேன். ஆனால், அவர் நம்பவில்லை. முன்பு நம்மை வைத்து 2 படங்கள் வெற்றிக் கொடுத்தவர் என்று அவர் நினைக்கவில்லை என்பதுதான் எனது வருத்தம். என்னை நம்பி வாங்க என்று எவ்வளவோ கேட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. வேறு யார் வேண்டாம் என்று சொல்லியிருந்தாலும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டேன். ஆனால், சூர்யா வேண்டாம் என்று சொன்ன போது ரொம்பவே வருத்தப்பட்டேன். இவ்வாறு கவுதம் மேனன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Suriya ,Gautham Menon ,Chennai ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி