×

வைஷ்ணவ் தேஜுடன் ரிது வர்மா டேட்டிங்: டோலிவுட்டில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகை ரிது வர்மா, நடிகர் வைஷ்ணவ் தேஜ் டேட்டிங் போன புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரிது வர்மா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் வைஷ்ணவ் தேஜ், சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்தவர். ரிது வர்மாவும் வைஷ்ணவ் தேஜும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. ஆனால் சிரஞ்சீவியின் மற்றொரு உறவினரான நடிகை நிஹாரிகா மூலம் ரிது வர்மாவும் வைஷ்ணவ் தேஜும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்நிலையில் அவர்கள் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இருவரும் துபாய்க்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ரிது வர்மா இதுவரை எந்த நடிகருடனும் கிசு கிசுக்கப்பட்டவர் கிடையாது. அவர் முதல் முறையாக டேட்டிங் செய்கிறார் என்றால் இது தீவிர காதலாகவே இருக்கும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இது தொடர்பாக ரிது வர்மாமா, வைஷ்ணவ் தேஜ் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags : Ritu Varma ,Vaishnav Tej ,Tollywood ,Hyderabad ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி