×

வடிவேலு என்ற பெயர் வந்தது எப்படி? வடிவேலு புது தகவல்

மதுரை: மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு வடிவேலு பரிசு வழங்கினார். பிறகு அவர் பேசும்போது, ‘எனக்கு நாராயணன் என்ற பெயரை என் மாமா சூட்டிய நிலையில், திடீரென்று இரண்டு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. எனது அம்மா முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செய்து, எனக்கு வடிவேலு என்று பெயர் சூட்டினார்.

அதனால், இவ்வளவு பெரிய இடத்துக்கு நான் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பவர்களிடம் வரியை போடுங்கள். ஏழை எளியவர்களுக்கு கொஞ்சம் பார்த்து போடுங்கள்’ என்றார். பிறகு அவர், ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தானத்தானா’ என்ற பாடலையும் மற்றும் ‘எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டை கேட்கும்’ என்ற பாடலையும், கூடுதலாக எம்.ஜி.ஆர் பாடலையும் பாடினார்.

Tags : Vadivelu ,Madurai ,Pongal festival ,Tax Department ,Narayanan ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்