×

வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பெண் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 600க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அடிக்கடி பிரச்னை இருந்துவந்துள்ளது.இது குறித்து பெண் தொழிலாளர்கள், நிர்வாகத்திடம் பலமுறை கேட்டபோது இதற்கு தண்டனையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.‘’நிலுவையில் உள்ள பிஎப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்’’என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் போலீசாருடன் தொழிற்சாலைக்கு வந்து மனித வள மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது….

The post வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பெண் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kakalur ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்