×

ரூ.24 லட்சத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை தடுப்பூசி மையத்திற்கான கட்டிடப்பணிகள்; அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்திற்கான கட்டிடப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, சுகாதார துணை இயக்குநர் டாக்டர் செந்தில் குமார், ஒன்றிய துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார், ஊராட்சித் தலைவர் பத்மாவதி கைலாசம் ஆகியோர் வரவேற்றனர். விழாவிற்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் பூவை மு.பாபு, ஒன்றிய செயலாளர் கைலாசம், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்பி.மாரிமுத்து, நிர்வாகிகள் ப.ச.கமலேஷ், பா.கந்தன், கு.தமிழ்ச்செல்வி, ஜி.சுகுமார், ஜெ.சாக்ரட்டீஸ், உதவி செயற்பொறியாளர் (மருத்துவப்பணிகள்) புஷ்பலிங்கம், இளநிலை பொறியாளர் ரஞ்சித் குமார், உதவி பொறியாளர் சதாசிவம், ஒப்பந்ததாரர் துரைவேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரசேரி ஊராட்சியில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்திற்காக 5 சென்ட் நிலத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கபாலி குமரேசன் பாபு என்பவர் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post ரூ.24 லட்சத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை தடுப்பூசி மையத்திற்கான கட்டிடப்பணிகள்; அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Nasser ,Tiruvallur ,Department of Public Health and Immunization ,Karunakaracherry Panchayat, ,Tiruvallur District ,Poontamalli Panchayat Union ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி