×

மலையாளத்தை விட தமிழில் பெஸ்ட் அறிமுகம்: ஷேன் நிகம் நெகிழ்ச்சி

சென்னை: எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஷ் தயாரித்துள்ள படம், ‘மெட்ராஸ்காரன்’. நாளை திரைக்கு வரும் இப்படத்தை ‘ரங்கோலி’ வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஷேன் நிகம் நெகிழ்ச்சியுடன் பேசுகையில், ‘நான் மிகப்பெரிய லக்கி மேன். மலையாளத்தில் கூட எனக்கு இதுபோல் ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் எனக்கு சிறந்த படம் கிடைத்துள்ளது. எனக்கு வாய்ப்பு வழங்கிய வாலி மோகன்தாஸுக்கு நன்றி. கலையரசன் இயல்பானவர். ‘மச்சான்’ என்று என்னை பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.

தவிர, இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். நிஹாரிகா மிகச்சிறந்த கோ-ஸ்டார். ஐஸ்வர்யா தத்தா ஒரு அப்பாவி. இவ்வளவு வெகுளியான ஒருவரை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார்’ என்றார். பிறகு பேசிய நிஹாரிகா, ‘சாம் சி.எஸ்சின் தீவிர ரசிகை நான். பாடல்களுக்கு மிக அற்புதமாக இசை அமைத்துள்ளார். ‘மெட்ராஸ்காரன்’ படமும், கதையும் கண்டிப்பாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்’ என்றார்.

Tags : SHANE NIKAM ,Chennai ,R Productions ,Jagdish ,Wali Mogantas ,Galaiarasan ,Niharika ,Aishwarya Dutta ,Karunas ,Shane ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா