×

நடிகர் ஆகிறார் அஜித் குமார் அண்ணன்

சென்னை: அஜித் குமாரின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எப்போது தொடங்கும் என்பது இன்னும் ெதரியவில்லை. இந்நிலையில் அஜித்தின் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையையும் குறைத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘திருமண தகவல் சேவை தளமான Jodi365.com-ன் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான நான், தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறேன். ‘கோகோ அண்ட் நட்’ என்ற சர்வதேச ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளேன். இப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரமாக அல்லாமல், நிஜ வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மேட்ச் மேக்கராக இருப்பது போலவே, திரையிலும் மிஸ்டர் மேட்ச் மேக்கராககவே நடிக்கவுள்ளேன்’’ என அனில் குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Ajith Kumar ,Chennai ,Ajith ,Anil Kumar ,Hollywood ,
× RELATED விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ரத்தா கபூர்