×

அமெரிக்காவில் ஏஐ படித்துக்கொண்டே 237வது படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய கமல்ஹாசன்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘கேம் சேஞ்சர்’, ‘தக் லைஃப்’, ‘இந்தியன் 3’, ‘கூலி’ உள்பட பல படங்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்து வரும் அன்பறிவு என்ற இரட்டையர், அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகின்றனர். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார். வரும் ஜூன் 5ம் தேதி ‘தக் லைஃப்’ படம் ரிலீசாகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வரும் கமல்ஹாசன், விரைவில் சென்னைக்கு திரும்புகிறார்.

இதையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 237வது படத்தை அன்பறிவு இயக்குகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘கமல்ஹாசன் சார் படங்களைப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம். இப்போது அவரையே இயக்குகிறோம். இதுதான் எங்கள் வாழ்நாள் சாதனை என்பதால், இப்படத்துக்கு மிகச்சிறந்த உழைப்பைக் கொடுப்போம்’ என்றனர். அமெரிக்காவில் 50 நாட்கள் ஏஐ சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்து முடித்துள்ள கமல்ஹாசன், கடந்த டிசம்பரில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திட்டமிட்டதை விட அவரது ஷெட்யூல் நீண்டதால் சென்னைக்கு வருவது மாறியது. இதற்கிடையே, அன்பறிவு இயக்கும் படத்தின் பணிகளை கமல்ஹாசன் துரிதப்படுத்தினார். அங்கிருந்து இயக்குனர்களிடம் பேசிய அவர், கதை எழுதும் பணியை தொடங்கிவிட்டார். இது அதிரடி ஆக்‌ஷன் கதை என்பதால், மல்டி ஸ்டார் படமாக உருவாக்கப்படுகிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Tags : Kamalhassan ,United States ,LOS ANGELES ,KAMALHASAN ,
× RELATED அமெரிக்காவில் வேகமாக பரவிவரும்...