×

கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கு குற்றவாளிகள் 27 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை

சிவகங்கை: கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேர், கடந்த 2018 மே மாதம் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். கோயில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த படுகொலைகள் நடந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்து, தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தார். அதன்படி கைதான 27 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனை மற்றும் 31 ஆண்டு, 3 மாத சிறைத்தண்டனை, தலா ரூ.49,200 அபராதம் விதிப்பதாக கூறிய நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலமே தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளில் 3 பெண்கள், மதுரை மகளிர் சிறையிலும், 23 பேர் மதுரை மத்திய சிறையிலும், ஒருவர் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்….

The post கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கு குற்றவாளிகள் 27 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Kachannath ,Sivagangai ,Kachannatha ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா