×

திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார்


செய்யாற: திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தப்பட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 19ம்தேதி பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சென்னையில் தங்கி வேலை செய்யும் வாலிபர், வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துசெல்வாராம்.

இந்நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் நேற்று அதிகாலை வயிற்று உபாதைக்காக வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதையறிந்த அப்பெண்ணின் கணவர் சென்னையில் இருந்து வீடு திரும்பினார். நேற்று இதுகுறித்து மோரணம் போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரில், எனது மனைவியை அதே ஊரைச்சேர்ந்த மதன்குமார் என்பவர் கடத்திச்சென்றுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான இளம்பெண் மற்றும் அவரை கடத்தியதாக கூறப்படும் வாலிபரை தேடி வருகிறார்.

The post திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvannamalai district ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!