×

ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகைக்கு சிறுபான்மையின மாணவர்கள் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும்  மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ம் வகுப்பு  முதல்  ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (என்எஸ்பி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு செப்டம்பர் 30ம் தேதி வரையிலும்,  பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற அக்டோபர் 31ம் தேதி வரையிலும் இணையதளத்தில் (என்எஸ்பி) இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எண்.32, சிங்கார வேலர் மாளிகை, இரண்டாவது தளத்தில்  இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்….

The post ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகைக்கு சிறுபான்மையின மாணவர்கள் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai ,Parsis ,Jains ,government ,Tamil Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...