சென்னை: ‘இந்தியன் 3’ படம் தொடர்பான பிரச்னையில் இயக்குனர் ஷங்கர், லைகா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் வரும் 10ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்துக்கு முன் தொடங்கிய ‘இந்தியன் 2’ படத்தின் தொடர்ச்சியாக ‘இந்தியன் 3’ படம் நிலுவையில் உள்ளது. அதனால் அதன் படப்பிடிப்பை ஷங்கர் முடித்து தர வேண்டும். மேலும் படப்பிடிப்பை முடிக்க ரூ.65 கோடியை ஷங்கர் கேட்கிறார். ஏற்கனவே நிறைய செலவாகியுள்ளதால் அவ்வளவு தொகை செலவிட முடியாது உள்ளிட்ட அம்சங்களுடன் திரைப்பட கூட்டமைப்பு, தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் லைகா புகார் அளித்தது.
மேலும் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை ‘கேம் சேஞ்சர்’ படத்தை தமிழ்நாட்டில் வௌியிடவும் தடை கோரப்பட்டது. இந்நிலையில் ஷங்கர், லைகா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டது. கமல்ஹாசன் தற்போது வௌிநாட்டில் உள்ளார். அவர் நாடு திரும்பியதும் ‘இந்தியன் 3’ படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து லைகா நிறுவனம் புகாரை வாபஸ் வாங்கியது. திட்டமிட்டபடி ‘கேம் சேஞ்சர்’ படம் தமிழ்நாட்டிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.