×

75வது சுதந்திர தினவிழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினவிழா ஒத்திகை முன்னிட்டு  நாளை, 11, 13 மற்றும் 15ம் தேதி ஆகிய நாட்கள் ஒத்திகை முடியும் வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: 75வது சுதந்திர தினவிழா 15ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை, 11, 13, 15 ஆகிய நாட்களில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கீழ்கண்ட வகைகளில் மாற்றியமைக்கப்பட உள்ளது.நேப்பியர் பாலம்  முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும். காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம். அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.  …

The post 75வது சுதந்திர தினவிழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,75th Independence Day ,75th Independence Day Rehearsal ,Independence Day Rehearsal ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...