×

18,728 நாட்கள் எம்எல்ஏ உம்மன்சாண்டி சாதனை

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து 51 ஆண்டுகள் நாட்கள் எம்எல்ஏ.வாக இருந்து சாதனை படைத்துள்ளார். கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. இவர் தற்போது புதிய சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 18,728 நாட்கள் அதாவது 51 ஆண்டுகளும், மூன்றே கால் மாதமும் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த 1970ல் உம்மன்சாண்டி 27வது வயதில் கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து, இதே தொகுதியில் 11 தேர்தல்களில் வென்று, எம்எல்ஏ.வாக உள்ளார். 2 முறை (2004-06, 2011-16) முதல்வராக இருந்தார். 2006 முதல் 2011 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இவர், 4 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி மட்டுமே சமீபகாலம் வரை கேரளாவில் தொடர்ந்து அதிக நாட்கள் எம்எல்ஏ.வாக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். தற்போது, அவரது சாதனையை உம்மன்சாண்டி முறியடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கே.எம்.மாணியும், உம்மன்சாண்டியும் மட்டுமே கேரள சட்டசபையில் எம்எல்ஏ.வாக 50 வருடங்களை பூர்த்தி செய்துள்ளனர். அதேநேரம், அதிக நாட்கள் அமைச்சராக இருந்தவர் என்ற சாதனை கே.எம்.மாணிக்கு மட்டுமே உண்டு. இவர் 8,759 நாட்கள் அமைச்சராக இருந்துள்ளார். உம்மன்சாண்டி 4,190 நாட்கள் அமைச்சராக இருந்தார். …

The post 18,728 நாட்கள் எம்எல்ஏ உம்மன்சாண்டி சாதனை appeared first on Dinakaran.

Tags : MLA ,Thiruvananthapuram ,Former ,Kerala ,Chief Minister ,Ooman Chandy ,Kerala… ,Umanshandi ,Dinakaran ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகர்...