×

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மசாவு: கணவர், மாமனார் கைது

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைச்செல்வி (20) என்பவரை காதலித்து கடந்த ஜூன் 27ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கலைச்செல்வியின் தந்தை முருகன், தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் கடந்த ஜூலை 2ம் தேதி இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கலைச்செல்வியை அவரது விருப்பத்தின் பேரில் கணவன் கோபிநாத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கலைச்செல்வி, தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்குச் சென்ற கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பாததால், கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதற்கிடையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கலைச்செல்வி இறந்து கிடந்தது தெரியவந்தது. பெரியதச்சூர் போலீசார் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கலைச்செல்வியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முண்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் கலைச்செல்வியின் கணவர் கோபிநாத், மாமனார் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாமியார் பூமாதேவி (50) என்பவரை தேடி வருகின்றனர். …

The post காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மசாவு: கணவர், மாமனார் கைது appeared first on Dinakaran.

Tags : Wikirwandi ,Viluppuram ,District ,Wikirwandi Union ,Srithar ,Kopinat ,Brahmadesam ,
× RELATED மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்