சென்னை: ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திரைப்படம் நாளை உலகமெங்கும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். ‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையில் நடந்த இப்பட விழாவில் நடிகர், இயக்குனர் மோகன்லால் பேசியதாவது: 47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குனராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், 2 கண்களில் பார்ப்பது போல, 2 கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்த பிறகு, நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.