×

ஆவேஷம் ஜீத்து மாதவன் இயக்கத்தில் மோகன்லால்

திருவனந்தபுரம்: முதல்முறையாக மோகன்லால் இயக்கியுள்ள 3டி படம், ‘ஃபரோஸ்’. குழந்தைகளுக்கான கதை கொண்ட இப்படம், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று திரைக்கு வருகிறது. முக்கிய வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறுகை யில், ‘தற்போது நான் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.

அடுத்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறேன்’ என்றார். இச்செய்தி மோகன்லால் ரசிகர்களை அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ போன்ற படங்களை இயக்கியவர், ஜீத்து மாதவன். இவற்றில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ படம், மலையாளம் உள்பட மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

Tags : Mohanlal ,Aavesham Jeethu Madhavan ,Thiruvananthapuram ,Christmas ,
× RELATED இயக்குனர் ஆனது ஏன்? மோகன்லால் பதில்