×

ஜெய்பீம் பாணியில் நடந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு : காவல் நிலைய மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியது ஐகோர்ட்!!

சென்னை : கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் நடந்த மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் நித்யராஜ்,24. போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆண்டு ஐ.சி.எப்., பகுதியில், காதலர்களிடம் மொபைல் போனை பறித்ததாக, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.2 தினங்களுக்கு பிறகு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். வழியில், அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தனது மகனை ஐசிஎப் காவல் நிலையத்தில் போலீசார் சித்ரவதை செய்து கொன்றுவிட்டதாக நித்யராஜின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நித்யராஜ் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட்  நீதிபதி இளந்திரையன், காவல்நிலைய மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய ஆணையிட்டார். அத்துடன் நித்யராஜ் மரணம் அடைந்த போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதே வேளை நித்யராஜின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணத்தை 4 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வசூலித்து தரவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    …

The post ஜெய்பீம் பாணியில் நடந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு : காவல் நிலைய மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Tags : Jaypeem ,iCort ,Chennai ,Jaipeem ,Cal ,iCourt ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...