×

பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்: அரசு உத்தரவு

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப்பிரிவுப்படி கோயில்களுக்கு, அறங்காவலர்கள் குழு அரசால் அமைக்கப்பட வேண்டும். 3 பேருக்கு குறையாமல் மற்றும் 5 பேருக்கு மிகாமல் அக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு உறுப்பினர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராகவும், ஒரு உறுப்பினர் மகளிராகவும் இருத்தல் வேண்டும். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்கள் அரசாணையின்படி அமைக்கப்பட்ட குழுவால் கடந்த 9ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்து பரிந்துரைத்துள்ள நபர்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளார். குழுவின் பட்டியலை அரசு கவனமுடன் பரிசீலித்து கே.எம்.சுப்பிரமணியன் (திருப்பூர்), க.சந்திரமோகன் (சென்னை அண்ணாநகர்), ச.மணிமாறன் (திண்டுக்கல்), ரா.ராஜசேகரன் (திண்டுக்கல்), சத்யா (ஒட்டன்சத்திரம்) ஆகிய 5 பேரை திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்து ஆணையிடுகிறது. அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் குறித்த விதிகளின்படியும், இந்த ஆணை வெளியிடப்படும் நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Palani Dandaidapani Temple ,Chennai ,Tamil Nadu Government ,Government of Tamil Nadu ,Palanini Armored Temple ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்