×

அரிமளம் பேரூராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருமயம் : அரிமளம் பேரூராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற கொள்கை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.‘தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்’ என்ற செயல் திட்டம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மாதிரி பேரூராட்சி என்ற அளவில் இந்த திட்டத்தில் நீர் நிலைகள், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்தல், நீர் நிலைகளின் கரைப்பகுதி, பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ளுதல், குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தல், அகற்றுதல், நீர்நிலைகள் அருகில் உள்ள கருவேல மரங்கள் ஆகாய தாமரை புல், செடிகளை அகற்றுதல், அனைத்து வடிகால் பகுதிகளும் முழுமையாக தூர்வாருதல், சாலைகளில் காற்று மாசை குறைப்பதற்கான செடிகளை தேவையான இடங்களில் நடுதல் ,நீர் நிலைகள் அருகில் உள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றுதல் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை கொட்டுவதை அகற்றி நீர்நிலைகளின் அருகில் குப்பை கொட்டாதவாறு செய்தல் , ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற கொள்கைகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் கட்டிட கழிவுகளை அகற்றுவதில் பொதுமக்களில் பங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கட்டிடக்கழிவுகளை முறையாக கையாளுதல் போன்ற எண்ணற்ற செயல் திட்டங்கள் உடன் இந்த தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் துவங்கப்பட்டு அரிமளம் பேரூராட்சியில் கடந்த ஜூன் மாதம் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் அரிமளம் செட்டி ஊரணி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிக் கண்ணு, துணைத் தலைவர் கருப்பாயி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் , பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், அரிமளம் பசுமை மீட்பு குழுவினர் பொதுமக்கள் தன்னார்வலர்கள், என் ஜி ஓ அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று செட்டி ஊரணி குளத்தினை சுத்தப்படுத்தினர். பின்னர் ஜெய விளங்கியம்மன் கோவில் அருகே பொற்குடான் தேங்குப்பள்ளம் பகுதியில் பறவைகள், விலங்குகளுக்கு பலன் தரக்கூடிய மரக்கன்றுகளான நாவல் மற்றும் நீர் மருது என 50க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கெடுத்து கொண்டு இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்துவதற்கு மிகுந்த ஈடுபாடு காட்டினர்.இத்திட்டம் முழுமையாக செயல்படும் பட்சத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த பேரூராட்சியாக அரிமளம் விளங்கும் என்பதோடு சிறந்த பேரூராட்சிக்கான விருதை பெற வாய்ப்பு ஏற்படும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரின் எதிர்பார்ப்பாக அமைந்தது….

The post அரிமளம் பேரூராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Tirumayam ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் தவெக தலைவர்...