- ரஞ்சனா நாச்சியார்
- த்வெகா
- விஜய்
- ஆவதி பொலிஸ் ஆணையம்
- ஆவடி
- தமிழ்நாடு வெற்றி கட்சி
- ஆவாடி காவல் ஆணையர் அலுவலகம்
- சென்னை
- தமிழ்நாடு வெற்றி கிளப்
- அக்கட்சி
ஆவடி: சென்னை ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார் கொடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியில் பெண்களை இழிவுபடுத்தும் கலாசாரம் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து அக்கட்சி தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியின் சமூக வலைதளமான விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆகியோரின் மீது கண்டனம் தெரிவித்தும் அக்கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று கூறி ரஞ்சனா நாச்சியார் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இதன் பின்னர் தன்னை தவெகவின் சமூக வலைதளத்தில் இழிவாக பேசிய சமூக வலைதளமான விர்ச்சுவல் வாரியர்சை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் அவர்களை கண்டிக்க தவறி விஜய்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தில் நேற்று காலை ரஞ்சனா நாச்சியார் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘’தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வெளியேறிய தன்னை அக்கட்சியின் சமூக வலைதளமான விர்ச்சுவர் வாரியர்ஸ் அவதூறான கருத்துகளுடன் தகாதவார்த்தைகளில் பேசி வருகின்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்துக்கு நேற்று மாலை வழக்கறிஞர்களுடன் ரஞ்சனா நாச்சியார் வந்தார். பின்னர் அவர், காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, தவெக தலைவர் விஜய் மற்றும் தவெகவின் சமூக வலைதளமான விர்ச்சுவர் வாரியர்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு புகார் மனுவை வழங்கினார்.
அதில், ‘’தன்னை தவெக கொடி, சின்னத்துடன் இழிவாக பேசி வருவதாகவும் தவெகவில் இருந்து வெளியேறிய பெண்களை தகாதமுறையில், அவர்களின் இணையதள பக்கத்தில் சித்தரிக்கும் கலாசாரத்தை உடனடியாக தடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
