×

மதுரையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த பெற்றோர்

மதுரை: மதுரை, சொக்கலிங்க நகரை சேர்ந்தவர் நாகராஜன்(56). மனைவி குருவம்மாள்(54). வீட்டு முன் பகுதியில் வடைக்கடை நடத்தி வருகின்றனர். 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி வீட்டு மாடியில் வசித்து வருகிறார். இளைய மகன் மாரிச்செல்வம்(27). தொழில் கல்வி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டிலேயே இருந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது பெற்றோரிடம் அடிக்கடி மது அருந்த பணம் ேகட்டு ெதாந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, போதையில் வந்த மாரிச்செல்வம், பெற்றோரிடம் பணம் கேட்டும், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரியும் தகராறில் ஈடுபட்டார். இதனை தந்தை நாகராஜன் தட்டி கேட்டார். அப்போது அவரை மாரிச்செல்வம் கீழே தள்ளினார். தடுத்த அம்மாவையும் கீழே தள்ளி விட்டார். விரக்தியடைந்த பெற்றோர், தூங்கிக் கொண்டிருந்த மகன் மாரிச்செல்வத்தின் கழுத்தை ஸ்கிப்பிங் கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர்.   பின்னர் இருவரும் எஸ்.எஸ்.காலனி போலீசில் சரணடைந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்….

The post மதுரையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Nagarajan ,Chokkalinga, Madurai ,Guruvammal ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!