×

வழக்கறிஞர் என கூறி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: ஆடியோ வைரல்

ஆவடி: ஆவடி, திருமலைராஜபுரத்தில் வசிப்பவர் பவேஷ் ஜெயின். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு, செல்போன் விற்பனை தொடர்பாக சேக்காடு பகுதியை சேர்ந்த ஜெயம் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி, கடந்த 2 மாதங்களுக்கு முன், பவேஷ் ஜெயினிடம் ₹1.50 லட்சம் மதிப்புள்ள செல்போனை கடனுக்கு ஜெயம் வாங்கி சென்றார். ஆனால், அதற்கான பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். அதற்கு பிறகு, செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஜெயம் தலைமறைவாகி விட்டார்.இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் கடந்த மே 28ம் தேதி பவேஷ் ஜெயின் புகார் செய்தார். காவலர் விக்டர், ஜெயமின் தந்தைக்கு போன் செய்து, விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயத்தின் வழக்கறிஞர் என கூறி, காவலர் விக்டரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து காவலரை மிரட்டியது உண்மையான வழக்கறிஞரா, எந்த ஊரை சேர்ந்தவர், அவருக்கும் ஜெயமிற்கும் என்ன தொடர்பு என ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மிரட்டல் ஆடியோ வைரலானதை தொடர்ந்து, ஜெயம் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்….

The post வழக்கறிஞர் என கூறி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்: ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Bhavesh Jain ,Tirumalairajapuram, ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்