×

செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. 188 நாடுகளை சேர்ந்த சுமார் 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக தனியார் விடுதி, ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடங்கியது. ஒத்திகை போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ, அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சதுரங்கத்தை குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். 4 ஆண்டுகளில் செய்ய வேண்டிய செஸ் ஒலிம்பியாட் பணிகளை 4 மாதங்களில் தமிழக அரசு செய்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பாகவே செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி நடைபெறுகிறது. 28ஆம் தேதி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் போட்டி நடக்கிறது. செஸ் ஒத்திகை போட்டியில் 700க்கும் மேற்பட்ட சதுரங்க பலகைகளில் 1,400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை எனவும் கூறினார். …

The post செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chess Olympiad series ,Minister Maianathan ,Chennai ,44th International Chess Olympiad Competition ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...