×

கவுன்டி டெஸ்ட் கிரிக்கெட்: 410 ரன் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல்

இங்கிலாந்தில் தற்போது கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் உள்ள பல முன்னணி டெஸ்ட் வீரர்கள் பங்கேற்று விளையாடுவது வழக்கம். இந்திய அணியின் புஜாரா, உமேஷ் யாதவ் போன்றவர்கள் இத்தொடரில் ஆடி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இம்முறை அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.இந்நிலையில் லீசெஸ்டெர்ஷிர், க்ளாமோர்கன் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய லீசெஸ்டெர்ஷிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 584 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக முல்டர் 201 பந்துகளில் 156 ரன் எடுத்து அசத்தினார்.இதனை தொடர்ந்து களமிறங்கிய க்ளாமோர்கன் அணியில் இன்கிராம் 139 (236) சதமடித்தார். தொடர்ந்து சாம் நார்த்ஈஸ்ட்டின் அபார ஆட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. அவர் 450 பந்துகளில் 45 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 410 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கூக்கும் சூப்பராக ஆடி 227 பந்துகளில் 191 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அந்த அணி 795/5 ரன்கள் எடுத்திருந்தபோது க்ளாமோர்கன் கேப்டன் டிக்ளேர் செய்தார். நார்த்ஈஸ்ட் அடித்த இந்த 410 ரன்கள் வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. முதல்தர போட்டிகளில் இதுவரை மொத்தம் 8 வீரர்கள் மட்டுமே 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷிர் அணிக்காக 1994-ல் லாரா அடித்த 501 ரன்கள்தான் தற்போதுவரை உலக சாதனையாக இருக்கிறது. 1895-ல் ஆர்ச் மெக்லேரின் (424), 1988-ல் கிரேம் கேக் (405) ஆகிய இந்த நான்கு பேர் மட்டுமே கவுண்டி கிரிக்கெட்டில் 400 ரன்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கவுன்டி டெஸ்ட் கிரிக்கெட்: 410 ரன் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : County Test ,England ,County Cricket Test ,Dinakaran ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்