×

ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்தினால் 30% சலுகை: அமைச்சர் தகவல்

சென்னை: மேற்கு ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹான் ரோஜர் குக் இந்தியா வந்துள்ளார். அந்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தவும், தொழில் முதலீட்டை ஈர்ப்பதும் அவரது வருகையின் நோக்கமாகும். இந்நிலையில் இக்குழுவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை சென்னையில் சந்தித்தனர். இதில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவரும், தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், ரவி கொட்டாரக்கரா, சுரேஷ் காமாட்சி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் மோகன் ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹான் ரோஜர் குக், ‘மேற்கு ஆஸ்திரேலியாவில் தமிழ் படங்களின் படப்பிடிப்புகளை நடத்தினால், அவர்களுக்கு படப்பிடிப்பு செலவில் 30% சலுகை வழங்கப்படும். ஆனால், அங்கு படப்பிடிப்புக்காக ரூ.75 கோடி வரை செலவு செய்ய வேண்டும்’ என்றார். அப்போது அவரிடம், ‘எல்லா படங்களுக்கும் 30% சலுகை வழங்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து  உடனே பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்….

The post ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்தினால் 30% சலுகை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Australia ,Chennai ,Tourism Minister ,Hon Roger Cook ,India ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியா நிலச்சரிவில்...