×

போதைப்பொருள் விற்ற வழக்கு மும்பை, ஐதராபாத்தை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன், மெத்தகேட்டமைன் என்ற போதை பவுடர் ரகசியமாக விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை புதுவண்ணாரப்பேட்டை, துறைமுகம் குடியிருப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேக நிலையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், மெத்தகேட்டமைன் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் (42), மும்பை பயாஸ் அகமது ஷேக் (50) எனத் தெரியவந்தது. பிடிபட்ட இருவரையும் கைது செய்து, வடசென்னை பகுதியில் மீண்டும் மெத்தகேட்டமைன் போதை பவுடர் விற்பதற்கு மீண்டும் இங்கு வந்துள்ளார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post போதைப்பொருள் விற்ற வழக்கு மும்பை, ஐதராபாத்தை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Hyderabad ,Thandaiyarpet ,North Chennai ,Vannarpet ,Puduvannarpet ,Kasimedu ,Vyasarpadi ,Kodunkaiyur ,Mumbai, ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு