×

‘புஷ்பா 2: தி ரூல்’ யாருடைய படம்? நஸ்ரியா பதில்

சென்னை: சுகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில் ஆகியோருக்கு இடையே நடக்கும் மோதல்களே கதையாக இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்த பஹத் பாசில், 2ம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுபற்றி பஹத் பாசில் மனைவியும், நடிகையுமான நஸ்ரியா கூறுகையில், ‘ஒவ்வொரு படத்திலும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பஹத் பாசில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார்.

‘புஷ்பா: தி ரைஸ்’ முதல் பாகத்தை விட, 2வது பாகத்தில் அவருக்கான முக்கியத் துவம் அதிகமாக இருக்கும். இது முழுமையான பஹத் பாசில் படமாகவும் இருக்கும். முதல் பாகத்தில் வந்தது அவரது அறிமுகம்தான், உண்மையிலேயே பஹத் பாசில் யார் என்பது 2வது பாகத்தில்தான் வெளிப்படும்’ என்றார். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தில், பன்வார் சிங் என்ற வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரியாக பஹத் பாசில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.

Tags : Nazriya ,Chennai ,Sukumar ,Allu Arjun ,Bahad Basil ,Kauraba ,
× RELATED அல்லு அர்ஜுன் வழக்கால் அப்செட்...