×

ஹார்ட்டுல ஃபீலிங்கு இசை ஆல்பம்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மையப்படுத்தி ‘வணக்கம் தமிழா’ என்கிற ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டவர் ‘வணக்கம் தமிழா’ சாதிக். அதன்பிறகு ‘காடுவெட்டி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அடுத்ததாக ‘ரெட் அண்ட் ஃபாலோ’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இதற்கிடையே தற்போது மீண்டும் ‘ஹார்ட்டுல ஃபீலிங்கு’ என்கிற மியூசிக் வீடியோ ஆல்பம் ஒன்றை பாடல் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் சாதிக். இந்த ஆல்பத்தை இஆர்பி புரொடக்‌ஷன்ஸ் பொன் ஈஸ்வரி, ரத்தினவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மலேசியா திலீப் வர்மன் இந்த பாடலை பாடியுள்ளார். ராஜன் ரத்தினவேல் நாயகனாகவும், தர் மாஸ்டர் மகள் அக்க்ஷதா தர் நாயகியாகவும் நடித்துள்ளனர். விரைவில் யூடியூபில் வெளியாகிறது. ‘ரெட் அண்ட் ஃபாலோ’ படத்தில் கருணாகரன், பாலசரவணன், ஜிபி முத்து, யாஷிகா ஆனந்த், ராபர்ட் மாஸ்டர், அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Tags : Hartula Feeling ,CHENNAI ,' Sadiq ,Tuticorin Sterlite ,
× RELATED ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு:...