×

உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடம் டிரோன்களை வாங்கும் ரஷ்ய ராணுவம்: அமெரிக்கா கண்காணிப்பு

ஜெட்டா: உக்ரைனில் தாக்குதல் நடத்துவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை வாங்கும் நடவடிக்கையில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் 6 அரபு வளைகுடா நாடுகளின் தலைவர்களையும், எகிப்து, ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் பிராந்திய உச்சி மாநாட்டில் சந்திக்க உள்ளார். இதற்காக 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் ஈரான் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் நடந்து வரும் போரில் தாக்குதல் நடத்துவதற்காக, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்) ஈரானிடம் இருந்து வாங்க ரஷ்யா முயன்ற வருகிறது. இதற்காக ரஷ்ய அதிகாரிகள் கடந்த மாதம் 8ம் தேதியும், ஜூலை 15ம் தேதியும் ஈரானின் கஷான் விமானப்படை தளத்துக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஈரானின் ஷாஹெத்-191, ஷாஹெத்-129 டிரோன்களின் செயல்பாடுகள் விளக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவுக்கு பல நூறு டிரோன்களை விற்க,  ஈரான் அரசு தயாராகி வருகிறது,’ என்று தெரிவித்துள்ளார்.அடி தாங்கலை…* ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நவீன ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன. * இதனால், ரஷ்ய படைக்கு பலத்த சேதமும், பின்னடைவும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, டிரோன் தாக்குதலில் ரஷ்ய படைகள் சிதறடிக்கப்படுகின்றன. * இதன் காரணமாகவே, ரஷ்யாவும் டிரோன் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ஈரானிடம் இருந்து அதை வாங்குகிறது….

The post உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடம் டிரோன்களை வாங்கும் ரஷ்ய ராணுவம்: அமெரிக்கா கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,US ,Jeddah ,Russia ,Iran ,President Biden ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி