×

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், விழா மேடை அமைப்பு, பார்வையாளர்கள் அரங்கம், இருக்கை வசதி, விழா நேரலை செய்வதற்கான வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மேம்பாட்டு பணிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்  கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. பூஞ்சேரி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த அனைத்து பணிகளும் வரும் 23ம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளை உலக மக்கள் அனைவரும் நேரலையில் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.  …

The post நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad ,Nehru Internal Sports Stadium ,Minister Maianathan ,Chennai ,Minister ,Maianathan ,Dinakaran ,
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...