×

அதிமுக அலுவலகம் கட்சியினர் மோதல் கலவரத்தில் ஈடுபட்ட 14 பேர் அடையாளம் தெரிந்தது: 4 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், சிசிடிவி பதிவுகள் மூலம் கலவரத்திற்கு காரணமான 14 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு 11ம் தேதி வானகரத்தில் நடந்தது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கடுமையாக மோதல் சம்பவம் நடந்தது. இதில் 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் மற்றும் 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மோதலில் ஈடுபட்டதாக எடப்பாடி ஆதரவாளரான ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் பாசறை பாலசந்திரன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக எடப்பாடி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என தனித்தனியாக மொத்தம் 3 வழக்குகள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் மோதல் தொடர்பாக முழு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் 45 நிமிடங்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது.அவ்வை சண்முகம் சாலையில் பொருத்தப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் பெற்று மோதல் தொடர்பான வீடியோக்களை சேகரித்துள்ளனர். அதில் 3 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவை போலீசார் ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று வரை தென் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் உள்பட 14 பேர் கலவரம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. …

The post அதிமுக அலுவலகம் கட்சியினர் மோதல் கலவரத்தில் ஈடுபட்ட 14 பேர் அடையாளம் தெரிந்தது: 4 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : THE SUPREME OFFICE ,Supreme Head Office ,Edabadi ,O. ,Panneirselvam ,Supreme Office ,Riot ,4 Personnel Organization ,Dinakaraan ,
× RELATED எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப...