×
Saravana Stores

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம்: சூர்யா பேச்சு

சென்னை: ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி, போஸ் வெங்கட் நடித்துள்ள 3டி படம், ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்துக்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது:  எனது 27 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் என்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி.

‘கங்குவா’ படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த் சாருக்கு மிகவும் நன்றி. இப்படத்தில் நடித்த பாபி தியோல், எனக்கு இன்னொரு சகோதரர் மாதிரி. ‘சிறுத்தை’ சிவாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் நான் சிறந்த மனிதனாக மாறியுள்ளேன். ‘நல்லதே நடக்கும்’, ‘என் மனதை யாரும் சங்கடப்பட வைக்க முடியாது. அதற்கான சக்தியை அவருக்கு கொடுக்க மாட்டேன்’ என்று சிவா சொல்வார். மன்னிப்பது போன்ற சிறந்த விஷயம் எதுவும் இல்லை என்று எனக்குப் புரிய வைத்தார்.

எனவே, யார் நம்மீது எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும், பதிலுக்கு அன்பை மட்டுமே பரிமாறுவோம். சில தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நேரத்தைச் செலவு செய்து பதிலளிக்க வேண்டாம். திரையுலக வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்துள்ளேன். அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதிக பொறுப்புடன் செயல்பட்டு வருகிறேன்.

லயோலா கல்லூரியில் எனக்கு ஜூனியரான அவர், என்னை வைத்து 2 படங்கள் தயாரித்துள்ளார். அவர்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவரை எப்போதும் யார் வேண்டுமானாலும் அணுகலாம். அவருக்கு எனது வாழ்த்துகள். கல்லூரியில் படித்த எனது இன்னொரு நண்பர் புதிய பாதையில், ஒரு புதிய பயணத்துக்காக தயாராகி இருக்கிறார். அவரது வரவும் நல்வரவாக இருக்கட்டும். (விஜய் என்ற பெயரை சூர்யா குறிப்பிடவில்லை)

Tags : CHENNAI ,Suriya ,Bobby Deol ,Disha Patani ,Karunas ,Yogi Babu ,Natty ,Bose Venkat ,Siva ,KE Gnanavel Raja ,Studio Green ,Vetri Palanichamy ,Devishree… ,
× RELATED போச்சம்பள்ளியில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி