×

குப்பநத்தம் அணை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை தந்த யானை-வனத்துறையினர் விரட்டியடித்தனர்

செங்கம் : குப்பநத்தம் அணை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை தந்த யானையை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் குப்பநத்தம் அணை உள்ளது. இதன் அருகே துரிஞ்சிகுப்பம் வனப்பகுதி உள்ளது. நேற்று காலை இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை தந்த யானை திடீரென கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர், விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக செங்கம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனஅலுவலர் பழனிச்சாமி, வனவர்கள் ஜனார்த்தனன், தமிழ்செல்வன், செல்லையன் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த யானையை அருகில் உள்ள காட்டிற்குள் விரட்டியடித்தனர். மேலும், அப்பகுதியில் முகாமிட்டு ெதாடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

The post குப்பநத்தம் அணை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை தந்த யானை-வனத்துறையினர் விரட்டியடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Kuppanantham dam ,Sengam ,department ,Thiruvannamalai district ,forest department ,Dinakaran ,
× RELATED தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி...