×

தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை மானியத்தில் டிராக்டர் பெற்றுத்தருவதாக மோசடி

செங்கம், மே 15: செங்கம் அருகே மானியத்தில் டிராக்டர் பெற்றுத்தருவதாக விவசாயிகளிடம் மோசடி செய்ததை தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி விவசாயி ராஜா(54). இவர் உட்பட 8 விவசாயிகளிடம் கடந்த 2017ம் ஆண்டு ₹15,000 செலுத்தி டிராக்டரை மானியத்தில் பெறலாம் என கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமஜெயம்(55) என்பவர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட ராமஜெயம் இதுநாள் வரையில் டிராக்டர் வாங்கி தரவில்லையாம். மேலும், வசூல் செய்த ₹1.20 லட்சத்தையும் திரும்ப தரவில்லையாம்.

இந்நிலையில், நேற்று காலை கம்யூனிஸ்ட் பிரமுகர் ராஜா போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ராமஜெயத்திடம் தாங்கள் குழுவாக கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், ஆத்திரம் அடைந்த ராமஜெயம் தனது கையில் வைத்திருந்த கீ செயினால் ராஜாவை உடல் முழுக்க சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே ராமஜெயம் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் படுகாயம் அடைந்த ராஜாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ராஜா கொடுத்த புகாரின்பேரில் செங்கம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள ராமஜெயத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை மானியத்தில் டிராக்டர் பெற்றுத்தருவதாக மோசடி appeared first on Dinakaran.

Tags : communist ,Sengam ,Thiruvannamalai District ,Kuppanantham ,Dinakaran ,
× RELATED செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள்...