பிருகு முனிவர் புத்திர பாக்யம் கேட்டு மகாலட்சுமியை வேண்டி தபவம் இருந்தார். அதன் பயனாக வரதராஜபெருமாள் கோயில் பொற்றாமரை குளத்தில் மகாலட்சுமி தாமரை மலர் மீது மழலையாக அவதரித்தாள். அவளை எடுத்து தேவி என நாமம் கொடுத்து வளர்த்து ஆளாக்கினார் பித்ரு முனிவர். பருவம் வந்த மகளை பெருமாளே ஆட் கொள்ளவேண்டும் என வேண்டினார். அந்த வேண்டுதலின் காரணமாக வரதராஜ பெருமாளே தேவியை ஆட் கொண்டார்.
ஏற்கனவே வரதராஜபெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார் என மூன்று தேவிகள் இருப்பதால் இத்தேவியை பெருந்தேவி என அழைத்து வந்தனர். இந்த பெருந்தேவி தாயாருக்கு படிதாண்டா பத்தினி என்றொரு சிறப்பு நாமமும் உண்டு காரணம். எந்த விழாவானாலும், உற்சவம் ஆனாலும் கோயில் ராஜகோபுரத்தை தாண்டி இந்த பெருந்தேவி தாயார் வெளியே செல்வதில்லை.உற்சவம் மற்றும் விழாக்களில் ராஜகோபுரத்தை தாண்டிச்செல்லும் நிகழ்ச்சிகளில் ஸ்ரீதேவி,பூதேவி,மலையாள நாச்சியார் ஆகியோர் மட்டுமே செல்கின்றனர்.
- இந்துஜா
