×

வரும் 21 முதல் 25ம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், நீச்சல், பளு தூக்குதல், பூப்பந்து,  கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபாடி, கையுந்து பந்து, கால்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டியில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் மற்றும் 25ம் தேதியும் காலை 7 மணி முதல் தொடங்கி நடத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 21ம் தேதி காலை 7 மணி முதல் தடகளம், கபாடி, கால் பந்து ஆகிய போட்டிகளும், 22ம் தேதி காலை 7 மணி முதல் வளைகோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளும், 23ம் தேதி காலை 8 மணியளவில் பளு தூக்குதல் போட்டி சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்திலும், 23ம் தேதி காலை 7 மணியளவில், டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகள் முகப்பேர், டென்னிஸ் விளையாட்டரங்கிலும் நடைபெற உள்ளது. 25ம் தேதி காலை 8 மணியளவில் பூப்பந்து போட்டி திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி மாலை 5 மணிவரை. மேலும், தகவல்களை பெற திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

The post வரும் 21 முதல் 25ம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CM Cup ,Thiruvallur ,Chief Minister's Cup ,Dinakaraan ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...