×

கிருஷ்ணா ஜோடியானார் வர்ஷா

சென்னை: நடிகர் கிருஷ்ணா நடிக்கும் அவரது 23 வது படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கிராமத்து கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா. டான் கிரியேசன்ஸ் எல். கணேஷ் தயாரிக்கிறார். ‘கழுகு’ படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். விழாவில் ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் சிஎஸ்., கலை இயக்குனர் பாப்ப நாடு சி. உதயகுமார், எடிட்டர் வெற்றிகிருஷ்ணன், மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post கிருஷ்ணா ஜோடியானார் வர்ஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Krishna ,Varsha ,Chennai ,Varsha Vishwanath ,Trichy ,Madurai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED துர்நாற்றம், கொசு உற்பத்தியை தடுக்க...