×

நான் ஒரு சராசரி நடிகைதான்

மும்பை: முன்னாள் உலக அழகியும், இந்திய முன்னணி ஹீரோயின்களில் ஒருவருமான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் நடித்த ‘சிட்டாடல்’ என்ற ஆங்கில வெப்தொடர், இந்தியில் ராஜ், டிகே இயக்கத்தில் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ பெயரில் வெப்தொடராக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் சமந்தா, வருண் தவான் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடர் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா கூறியதாவது:
இந்த வெப்தொடரில் நான் ஏற்றுள்ள கேரக்டருக்காக, என் உடலமைப்பை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக சில கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வந்தேன். அப்போது நான் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனால், அதையெல்லாம் மிகச்சிறந்த ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டேன். நான் ஒரு சராசரி நடிகைதான். என்னுடைய நடிப்பில் இன்னும் முதிர்ச்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். திரைப்பயணத்தில் நிறைய வெற்றிகளைச் சந்தித்து இருந்தாலும், எல்லாவற்றுக்கும் கூட்டுமுயற்சிதான் காரணம் என்று நம்புகிறேன். நான் மட்டுமே தனி நபராக எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. ஒரு படமோ அல்லது வெப்தொடரோ, அதன் உருவாக்கத்துக்குப் பின்னால் பலரது கடினமான உழைப்பும், திறமையும் மறைந்திருக்கிறது. அப்படி இருந்தால்தான் நம்முடைய திறமைகளும் வெளியே தெரியும். இதுவரை திறமையான குழுவினர், நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுடன் இணைந்து நான் பணியாற்றி இருக்கிறேன். அதை எனக்கான அதிர்ஷ்டம் என்று நம்புகிறேன்.

The post நான் ஒரு சராசரி நடிகைதான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,India ,Priyanka Chopra ,Hollywood ,Raj, ,DK ,Samantha ,Varun ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படத்தில் பணியாற்ற சம்பளம்...