×
Saravana Stores

முழுநீள காமெடி கதை காக்கா

சென்னை: ஆரென் பிக்சர்ஸ் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரித்துள்ள காமெடி படம், ‘காக்கா’. இனிகோ பிரபாகர், சென்ராயன், முனீஷ்காந்த், அப்புக்குட்டி, தேனி கே.பரமன், ரோஷ்மின், தான்யா, கூல் சுரேஷ், கிங்காங், செல் முருகன், ‘மகாநதி’ சங்கர், திருச்சி சாதனா, மொசக்குட்டி, மணிமேகலை, கொட்டாச்சி நடித்துள்ளனர். கெவின் டி கோஸ்டா இசையில் தேனி கே.பரமன், சபரீஷ் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.கே.சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை திரைக்கதை, வசனம் எழுதி தேனி கே.பரமன் இயக்கியுள்ளார். அக்கா, தங்கை ஆகிய இருவரில், தங்கையை ஒருவன் தீவிரமாக காதலிப்பதாகச் சொல்லி தொல்லை கொடுக்கிறான். அவனிடம், ‘என் அக்காவுக்கு திருமணம் நின்றுவிட்டது. அந்த மாப்பிள்ளையைக் கண்டுபிடித்து என் அக்காவுக்கு திரு
மணம் செய்து வைத்தால், நான் உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று தங்கை சொல்கிறாள். பிறகு என்ன நடக் கிறது என்பது மீதி கதை.

The post முழுநீள காமெடி கதை காக்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Renuka Krishnasamy ,Aren Pictures ,Inigo Prabhakar ,Senrayan ,Munishkanth ,Appukutty ,Theni K. Paraman ,Roshmin ,Tanya ,Kool Suresh ,Kingang ,Sel Murugan ,Mahanathi' Shankar ,Trichy Sadhana ,Mossakutty ,Manimekalai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு