×

எனது பெயரில் பண மோசடி: சாக்‌ஷி அகர்வால் எச்சரிக்கை

சென்னை: ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’, ‘டெடி’, ‘பகீரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வைரலாக்கி வரும் சாக்‌ஷி அகர்வால், தனது பெயரில் பணமோசடி நடப்பதாகவும், யாரும் அதை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நண்பர்களே, எனது பெயரில் சிலர் ஆல்டர்நேட் நம்பர் என்று சொல்லி, பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட நம்பரில் இருந்து யாராவது அழைத்து எனது பெயரைப் பயன்படுத்தினால், அதைக்கண்டு ஏமாந்துவிடாதீர்கள். நெருக்கமான சிலருக்கு எனது செல்போன் நம்பர் தெரியும். அப்படி பிசினஸ் விஷயமாக எனது செல்போன் நம்பர் தெரியாமல் தொடர்புகொள்ள நினைப்பவர்கள், எனது இ-மெயில் ஐடியில் தொடர்புகொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எனது பெயரில் பண மோசடி: சாக்‌ஷி அகர்வால் எச்சரிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sakshi Agarwal ,Chennai ,Sakshi Aggarwal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரில்லர் தி ஸ்டிங்கர்